மரபணு மாற்ற கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கப்‌படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில் மக்களின் உடல்நலப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதா‌க வெளியான தகவல் தவறானது என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். எனினும், அறிவியல் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிய ஜவடேகர், 130 கோடி மக்களுக்கு உணவளிக்க, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி தொடர்பாக அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறிய அமைச்சர், 15 நாட்களில் அரசு பதிலளிக்கும் என்றும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS