ஒருபோக சாகுபடியையாவது காப்பாற்ற போராடும் டெல்டா விவசாயிகள்


வழக்கமாக ஜூன்மாதத்தில் ‌காவிரி தண்ணீர் திறக்கப்பட்டு சம்பா சாகுபடிப்பணிகள் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ஆகிவிட்ட நிலையில் விவசாயிகள் குறுகிய கால பயிர் சாகுபடிக்கு இப்போதுதான் ஆயத்தமாகின்றனர்.

‌காவிரி நீரை எதிர்பார்த்து கண்பூத்துக்கிடந்த டெல்டா விவசாயிகளுக்கு ஆறுதல் தரும்விதமாக காவிரி நதிநீரை கூடுதலாக திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சாகுபடிப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். எனினும் நீண்டகால, நடுத்தர கால சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் நாகை போன்ற கடைமடைக்கு வரும்போது வடகிழக்குப்பருவமழையும் பெய்யத் தொடங்கிவிட்டால் பாசனம் செய்வது மிகவும் சிக்கலாகும் என்கிறார்கள் விவசாயிகள்.

நாகை போன்ற கடைமடை பகுதி மட்டுமின்றி, டெல்டா மாவட்டம் முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள், இந்த ‌ஒருபோக சாகுபடியை காப்பாற்ற பெருமுயற்சி செய்துவருகிற‌ர்கள்.

குறித்த காலத்தில் திறக்கப்படாததாலும், தாமதமாக ‌தற்போது கிடைக்க உள்ள‌தாலும், ஒரு சாகுபடியையாவது செய்யும் முனைப்பில் டெல்டா விவசாயிகள் இருக்கிறார்கள்.

POST COMMENTS VIEW COMMENTS