நீலகிரியில் மாற்று பயிராக காளான் சாகுபடி மேற்கொள்ள தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்


நீலகிரி மாவட்டத்தில் மாற்று பயிராக காளான் சாகுபடி மேற்கொள்ள தோட்டக்கலைத் துறை சார்பில் 50 சதவிகிதம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

கம்போஸ்ட் உரம் தயாரித்து காளான் வளர்ப்பு திட்டத்திற்க்காக 40 லட்சம் முதலீட்டில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டுள்ளதால் இந்த திட்டம் லாபகரமாக உள்ளதாக விவசாயிகள் கூறினார்.

தேயிலை விலை சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நிலவும் குளுமையான பருவநிலை உகந்ததாக இருப்பதாலும், உற்பத்தி செலவு குறைவு என்பதாலும் அதிகளவு விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS