நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி?: வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்திப்பட்டு நேரடி நெல்கொள்முதல் நியைத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, விற்பனை நிலைய அதிகாரி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப் மூலம் பரவி வருகிறது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில். அத்திபட்டு நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்வதற்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கொடுக்க மறுத்தால் கொள்முதல் செய்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு நெல் மூட்டைகளை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்‌டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

இது தொடர்பாக நுகர் பொருள் வாணிப கழக அதிகாரியிடம் கேட்டபோது, புகாரில் உண்மையிருந்தால் ‌சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்

POST COMMENTS VIEW COMMENTS