கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்டா தவிர்த்த பிற மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் இவ்வாண்டு 28 புள்ளி 34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாக‌ தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 61நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அ‌ந்த மாவட்டங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு செய்திட தான் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களின் உத்‌தரவின் படி, நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS