சர்வதேச ஆண்கள் தினமும் இன்று கொண்டாடப்பட வேண்டும்: பாஜக பெண் எம்.பி. கோரிக்கை

சர்வதேச ஆண்கள் தினமும் இன்று கொண்டாடப்பட வேண்டும்: பாஜக பெண் எம்.பி. கோரிக்கை
சர்வதேச ஆண்கள் தினமும் இன்று கொண்டாடப்பட வேண்டும்: பாஜக பெண் எம்.பி. கோரிக்கை

"சர்வதேச ஆண்கள் தினமும் இன்று கொண்டாடப்பட வேண்டும்" என மாநிலங்களவையில் பாஜக பெண் எம்.பி. சோனல் மன்சிங் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மத்திய பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது. மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில் இன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அவைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய மாநிலங்களவை பாஜக பெண் எம்.பி. சோனல் மன்சிங், ”சர்வதேச ஆண்கள் தினமும் இன்று கொண்டாடப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக, கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மைப்பகுதிக்கு சென்று எரிபொருள்கள் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நிலவியது.

இதையடுத்து அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கடும் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 1 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com