ரூ.20,000-க்குள் நல்ல செல்போன் வேணுமா? - இதுதான் லிஸ்ட்... செலக்ட் பண்ணுங்க!

ரூ.20,000-க்குள் நல்ல செல்போன் வேணுமா? - இதுதான் லிஸ்ட்... செலக்ட் பண்ணுங்க!
ரூ.20,000-க்குள் நல்ல செல்போன் வேணுமா? - இதுதான் லிஸ்ட்... செலக்ட் பண்ணுங்க!

தற்போது ஸ்மார்ட்போன் என்பது ஆறாம் விரலாகவே உள்ளது. வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனை, பங்குச் சந்தைகள் என அன்றாடத் தேவையின் பல வேலைகள் தற்போது செல்போன் மூலமாகவே நடந்துவருகின்றன. செல்போன் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய ரக செல்போன்களை சந்தையில் இறக்கிக்கொண்டே இருக்கின்றன.

புதுப்புது வசதிகளை கொடுத்து எந்த செல்போனை வாங்கலாம் என்று பயனாளர்களையே குழப்பி விடுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை செல்போன் நிறுவனங்களின் கணக்கு பட்ஜெட் போன்கள்தான். வெளிநாடுகளைபோல லட்சங்களை நெருங்கும் செல்போன்களை இந்தியாவில் பலரும் வாங்குவதில்லை. ரூ.10ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்பதே இந்திய சந்தை. அந்த இலக்குக்குள் தங்களுக்கு தேவையான கேமரா, மெமரி, ரேம் என செல்போனை தேர்வு செய்கிறார்கள் பயனாளர்கள். அப்படி ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டுக்குள் நல்ல ரிவீவ் பெற்றுள்ள போன்கள் என்னென்ன? பார்ப்போம்.

Samsung Galaxy M31s, Realme 7 Pro, Motorola One Fusion+, Redmi Note 9 Pro Max, Realme 6 Pro, Samsung Galaxy M31 ஆகிய மாடல்கள் தற்போதுக்கு ரூ.20ஆயிரத்துக்குள் சிறந்த போன்களாக gadgets.ndtv குறிப்பிட்டுள்ளது.

Realme 7 Pro மற்றும் Realme 6 Pro:

இந்தியர்களை சமீக நாட்களாக சரியாக கணித்து பட்ஜெட் பொருட்களை வாரி இறைக்கிறது ரியல்மி. அதில் குறிப்பிட்ட சிறந்த பட்ஜெட் போன்களாக Realme 7 Pro மற்றும் Realme 6 Pro உள்ளது. Realme 7 Pro ரூ. 19,999 க்கும், Realme 6 Pro ரூ.17,999க்கும் விற்பனையாகிறது. கேமரா கிளாரிட்டி, பேட்டரி பேக்கப், அதிவேக சார்ஜிங் என இரு போன்களுமே முக்கிய விஷயங்களில் ஸ்கோர் செய்கிறது. ஆனால் இரண்டுமே குறைந்த வெளிச்சத்தில் கேமரா பெர்பாமன்ஷில் சொதப்புகின்றன. அது ஒரு பெரிய குறை இல்லை என்றாலும் இந்த பட்ஜெட்டுக்கு சிறந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy M31s மற்றும் Samsung Galaxy M31:

Samsung Galaxy M31s போனானது ரூ.19,499க்கு விற்பனையாகிறது. Samsung Galaxy M31 ரூ.15,999க்கு விற்பனையாகிறது.Samsung Galaxy M31sஐ பொருத்தவரை, சிறந்த பேட்டரி, அதிவேக சார்ஜிங் போன்றவை பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. குறைந்த வெளிச்சத்தில் கேமராவின் சொதப்பல், பழைய ப்ராசெஸ்சர் என்பட்தெல்லாம் நெகட்டிவ். கிட்டத்தட்ட அதே பாசிட்டிவ், நெகட்டிவ்களை கொண்டுள்ளது Samsung Galaxy M31. மெமரி, ரேமை பொருத்து இதன் விலையில் மாற்றம் உள்ளது.

Motorola One Fusion+:

Motorola One Fusion+ போனானது ரூ.17,499க்கு விற்பனையாகிறது. சிறந்த பேட்டரி, சிறந்த புராசெஸ்சர், குறைகூறமுடியாத கேமரா, தெளிவான ஸ்பீக்கர் என பல பாசிட்டிவ்களை பெற்றுள்ளது. அதேவேளையில் பெரிய சைஸ், ஸ்லோ சார்ஜிங், குறைந்த வெளிச்சத்தில் சொதப்பும் வீடியோ என பல நெகட்டிவ்களும் உள்ளன.

Redmi Note 9 Pro Max:

இந்த போனானது ரூ.16,999க்கு விற்பனை ஆகிறது. சிறந்த புராசெஸ்சர், அதிவேக சார்ஜிங், சிறந்த பேட்டரி லைஃப், சிறந்த கேமரா என பாசிட்டிவ்களை கொண்டுள்ளது இந்த போன். பெரிய சைஸ், குறைந்த வெளிச்சத்தில் சொதப்பும் வீடியோ முன்பே இஸ்டால் செய்யப்பட்ட bloatware போன்றவை நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com