ஒருநாள் மட்டுமே... அசத்தலான தள்ளுபடிகளை அறிவித்த ரியல்மி.!

ஒருநாள் மட்டுமே... அசத்தலான தள்ளுபடிகளை அறிவித்த ரியல்மி.!
ஒருநாள் மட்டுமே... அசத்தலான தள்ளுபடிகளை அறிவித்த ரியல்மி.!

செல்போன் விற்பனையில் கோலோச்சும் ரியல்மி பிளாக் ஃபிரைடே தள்ளுபடி விற்பனைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கிறிஸ்துமஸ் கொண்டாடத்தை மையமாக வைத்து மக்களிடையே ஷாப்பிங் மோகத்தை அதிகப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடப்படும். அந்த நாளுக்கு அடுத்தநாளாக பிளாக் ஃபிரைடே கொண்டாடப்படும். இது அமெரிக்காவில் பிரசித்தமான வழக்கமுறை. இந்த ஆஃபர் முறையை கையில் எடுத்துள்ள பிரபல ரியல்மி செல்போன் நிறுவனம், பிளாக் ஃபிரைடே நாளில் இந்தியாவில் பல ஆஃபர்களை அறிவித்துள்ளது.

நாளை (நவம்பர் 27) இரவு 12 மணிக்கு தொடங்கும் இந்த ஆஃபர் திருவிழா ஒரு நாள் மட்டுமே. ரியல்மி ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் ஆகிய தளங்களில் இந்த ஆஃபர்களில் ரியல்மி பொருட்களை பெற்றுச்செல்லலாம். Realme X50 Pro, Buds Air Pro, and Narzo 20 Pro போன்ற பல மாடல்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேலும் சில ஆஃபர்களும் இணையதளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Realme X3, X3 SuperZoom ஆகிய மாடல்களுக்கு அப்டூ ரூ.4000வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. Realme C3, Realme 6, Realme 6i, and Realme Narzo 20 Pro ஆகிய மாடல்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

Realme Buds Air Pro தற்போது ரூ.4999க்கு விற்பனை ஆகிறது. இந்த மாடலுக்கு நாளை ரூ.700 தள்ளுபடி கிடைக்கும். அதன்படி, ரூ.4299க்கு விற்பனையாகும். அதுபோல, Realme Smart Cam 360 தற்போது ரூ.2999க்கு விற்பனை ஆகிறது. இதேமாடல் நாளை தள்ளுபடி விலையாக ரூ.2499க்கு விற்பனையாகும்.

இதேபோல Realme Buds 2, Realme Buds Wireless, Realme Buds Classic (White), Realme Buds Classic (Black), Realme Buds Wireless Pro, Realme Buds Air Neo, Realme Buds Q, Realme Watch, Realme Band, Realme 18W 20000mAh Powerbank உள்ளிட்ட பல மாடல்கள் நாளை தள்ளுபடி விலையில் கிடக்கும் என ரியல்மி அறிவித்துள்ளது.

Source: indiatoday

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com